கூகுள் தேடலில் முதலிடம் பிடித்த மெர்சல்

விஜய்யின் நடிப்பில் மிக பிரமாண்டமான முறையில் தயாராகிவரும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100ஆவது திரைப்படமான மெர்சல் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளது.

மெர்சல் திரைப்படத்தில் இசை வெளியீடு குறித்த அறிவிப்பை தொடர்ந்தே இத்திரைப்படம் கூகுள் தேடலில் முதலிடம் பிடித்துள்ளது.

அட்லி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படம் விஜய் இரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமையவுள்ளது. இவ்வாறு அதீத எதிர்ப்பார்ப்பு நிலவிவரும் இப்படத்தின் இசை வெளியீடு குறித்து அறிவிப்பு வெளியானது.

ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இத்திரைப்படத்தின் பாடல்கள் எதிர்வரும் 20ஆம் திகதி வெளியாகவுள்ளன.

இதில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்ற பாடல் மாத்திரம் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here