சம்பியன் போட்டியில் கழுத்து முறிந்து வீரர் உயிரிழப்பு

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற பொடிபில்டர் (bodybuilder )சம்பியன் போட்டியின் போது பார்வையாளர்களை மகிழ்விப்பதற்காக குட்டிக்கரணம் அடித்த வீரர் கழுத்து எலும்பு முறிந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொடிபில்டர் சம்பியன் போட்டிகளில் அதிக தடவைகள் வெற்றிபெற்ற சிஃபிசோ லுங்கலோ தாபெத் என்னும் 23 வயதுடைய இளம் வீரரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கழுத்து எலும்பு முறிவடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் நேற்று (வெள்ளிக்கிழமை) உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

போட்டிக்கு முன்னதாக பார்வையாளர்களை மகிழ்விக்கும் பொருட்டு போட்டி மேடையில் குட்டிக்கரணம் போட்ட சிஃபிசோவின் தலை தரையில் மோதியதாகவும் இதன்காரணமாக அவரது கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here