சரணாலயத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட உயிரினங்களுக்கு உணவு!

புத்தளம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியின் காணமாக சரணாலயங்களில் வாழும் காட்டு உயிரினங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

உயிரினங்கள் உணவு மற்றும் நீரின்றி அவதிப்படுவதைக் கருத்திற் கொண்டு இராணுவத்தினரால் புத்தளம் தப்போவ சரணாலயத்தில் மீகஸ்வெவ மற்றும் அதனை அண்மித்த பல பிரதேசங்களில் வாழும் மிருகங்களுக்கு நீர் மற்றும் உணவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மீகஸ்வெவ மற்றும் ஏனைய பிரதேசங்களில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக அங்குள்ள குளங்களில் நீர் வற்றி நிலம் வறண்டு காணப்படுவதால் நீரும் உணவும் இன்றி காட்டு மிருகங்கள் உயிரிழந்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here