சீன எல்லையில் இந்தியா படைகளை குவிக்கிறது!

இந்திய – சீன எல்லைப் பகுதியில் இராணுவ வீரர்கள் எண்ணிக்கையை இந்தியா உயர்த்தியுள்ளதால் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூட்டான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனா சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதனை இந்தியா தடுத்து நிறுத்தியது. இதனால் இரு நாடுகளுக்கு இடையே மோதல் உருவாகியுள்ளது.

டோக்லாம் பகுதியில் இரு நாடுகளும் படைகளை குவித்துள்ள நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் எனச் சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

ஆனால் எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக கூறிவிட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் சீனா விடுக்கும் சவாலை சந்திக்க போதுமான வலிமை இந்தியாவிற்கு உள்ளது என பாதுகாப்புத் துறை அமைச்சர் அருண் ஜெட்லி உறுதியாகத் தெரிவித்தார்.

டோக்லாம் பகுதியில் இருந்து இந்திய தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற சீனா தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், டோக்லாம் அருகே உள்ள கிராமத்தில் இருந்து மக்கள் வெளியேற இந்திய ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனையடுத்து, சீனா இராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாகச் செய்தி வெளியாகியுள்ளது.

இந்நிலையில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.

ஆனால், எவ்வளவு வீரர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இதனால் சீன எல்லைப் பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here