சைட்டம் தலைவர் பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டம்?

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியின் (சைட்டம்) தலைவர் டொக்டர் நெவில் பெர்னாண்டோ அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.

தாம் மீளவும் அரசியலில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளதாகவும், அடுத்த பொதுத் தேர்தலில் பிரதான அரசியல் கட்சியொன்றின் ஊடாக போட்டியிட உள்ளதாகவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

மக்களுக்கு நான் சேவையாற்றி வருகின்றேன். எனவே எனக்கு அரசியலில் பிரவேசிக்க உரிமையுண்டு.

பல கோடி ரூபா செலவிட்டு நிர்மாணிக்கப்பட்ட நெவில் பெர்னாண்டோ போதனா வைத்தியசாலையை மக்கள் நலன் கருதியே அரசாங்கத்திடம் ஒப்படைத்தேன்.

இந்த வைத்தியசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்த போது எவ்வித பணத்தையும் அரசாங்கத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவில்லை.

மாலபே தனியார் மருத்துவ கல்லூரி அமைந்துள்ள தேர்தல் தொகுதியின் சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர் சுசில் பிரேமஜயந்த, இந்த தொகுதியின் முன்னேற்றத்திற்காக எதனையும் செய்யவில்லை.

நான் அரசியலில் பிரவேசிக்கும் கட்சி பற்றி இன்னும் தீர்மானிக்கவில்லை. கல்விக்கு கூடுதலாக சேவையாற்றும் கட்சியொன்றின் ஊடாக நான் அரசியலில் பிரவேசிக்க தீர்மானித்துள்ளேன்.

நான் அரசியலுக்கு வந்தால் சுசில் பிரேமஜயந்த போன்றவர்களின் கூச்சலை குறைக்க முடியும். அவர்கள் வெறும் பேச்சு மட்டுமே செயல் எதுவும் கிடையாது.

அரசாங்கம் தொடர்பில் அதிருப்தி அடைந்திருப்பதாகக் கூறிக்கொண்டு என் சுசில் பிரேமஜயந்த அமைச்சுப் பதவியை வகிக்க வேண்டுமென நெவில் பெர்னாண்டோ கேள்வி எழுப்பியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here