டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ரெலோ!

வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு டெலோ இயக்கத்தின் தலைமைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ரெலோ இயக்கத்தின் முக்கிய சந்திப்பொன்று இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் நடைபெற்றது.

குறித்த சந்திப்பின் பின்னர் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் “போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து விலக்குவது குறித்து இன்று எமது இயக்கத்தின் தலைமைக் குழுவினால் கோரிக்கை விடப்பட்டிருக்கின்றது.

இது குறித்து அமைச்சர் டெனிஸ்வரன் தனது முடிவினை நாளை அறிவிப்பதாகத் தெரிவித்திருக்கின்றார். எனவே இதன் பின்னர் இது குறித்த முடிவுகள் எமது தலைமைக் குழுவினால் முடிவெடுக்கப்படும்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here