தமிழக இளைஞர்கள் இலங்கையில் கைது.

குடிவரவு குடியகல்வு சட்டங்களை மீறி நாட்டில் தங்கியிருந்த மூன்று இந்திய பிரஜைகள் நிந்தவூர் பிரதேசத்தில் சம்மாந்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இந்த பிரதேசத்தில் நெல் அறுக்கும் இயந்திரங்களின் சாரதிகளாக பணியாற்றி வந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 21 மற்றும் 27 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

சுற்றுலா வீசா அனுமதியில் இலங்கை வந்துள்ள இவர்கள், தமிழகத்தை சேர்ந்தவர்கள் எனவும் இவர்கள் இன்று சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here