தேர்தல் ஒத்திவைப்பு அவசியமற்றது.

தேர்தல் ஒத்திவைப்பு தற்போது அவசியமற்றது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஒத்திவைக்கப்படுவதற்கு  அரசியலமைப்பை திருத்த வேண்டும். இது நாட்டில் தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும் என இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தேர்தல்கள் ஒத்திவைக்கப்படாமல் நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள முடிவுகளை வரவேற்கின்றோம். சப்ரகமுவ, கிழக்கு, வட.மத்திய மாகாணசபைகளின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களில் முடிவுக்கு வருகிறது.

இந்த சபைகளுக்கான தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வேண்டுமென்ற 20 ஆம் திருத்த யோசனையை கைவிட வேண்டும். உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் நாம் இப்போது ஏற்றுக்கொண்டுள்ள புதிய கலப்பு தேர்தல் முறைமையை ஒருமுறை பரீட்சித்து பார்க்கப்பட வேண்டும்” என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here