நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவில்லை.

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்கப்படாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மினுவன்கொட பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

விஜயதாச ராஜபக்சவிற்கு ஆதரவளிக்கப்படாது, அவர் ஊர்க்காரர் தானே. அவர் உள்ளே போராட்டத்தை நடத்த வேண்டும் அதற்கு ஆதரவளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மோட்டார் போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராதம் குறித்தும் இதன் போது கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

குடிபோதையில் வாகனம் செலுத்துவோருக்கு அபராதம் விதிப்பதில் தவறில்லை. எனினும் சாரதி அனுமதிப்பத்திரம், காப்புறுதி போன்றவற்றை மறந்து வைத்துவிட்டு வந்தவர்களுக்கு பாரிய தொகை அபராதம் விதிப்பது நியாயமில்லை.

குறிப்பாக முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here