புத்தக கண்காட்சிக்காக இந்தியாவிலிருந்து சுமார் 20,000 தமிழ் புத்தகங்கள்!

நல்லூரில், புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன், இதற்காக இந்தியாவிலிருந்தும் தமிழ் புத்தகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

இந்திய சுதந்திர தினத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தை முன்னிட்டு யாழ். இந்திய துணைத் தூதரகமானது யாழ்ப்பாண மாநகரசபையுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

குறித்த புத்தகக் கண்காட்சியினை 12ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், இதற்காக ஏறத்தாழ 20,000 இற்கும் மேற்பட்ட தமிழ்ப் புத்தகங்கள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இவ்வாறானதோர் புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ள யாழ். இந்திய துணைத் தூதரகமானது இனிவரும் காலங்களிலும் இது போன்ற புத்தகக் கண்காட்சியை ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here