புத்தூர் மேற்கு கிராம சேவகரை தாக்கிய இளைஞர்கள் கைது.

அச்சுவேலி – புத்தூர் மேற்கு கிராம சேவகரை தாக்கிய சம்பவம் தொடர்பில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிராம சேவகர் கடமையாற்றும் அலுவலகத்திற்கு அருகில் உள்ள மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள், தனது பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் விளையாடுமாறு ஆலோசனை வழங்கியதால், இளைஞர்கள் அலுவலகத்திற்கு வந்து கிராம சேவகரை தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் 16 மற்றும் 25 வயதான இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here