புல்மோட்டையில் வீதி விபத்து! ஒருவர் பலி.

திருகோணமலை-புல்மோட்டை பிரதான வீதி குச்சவெளி பகுதியில் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் புடவைக்கட்டு பகுதியைச் சேர்ந்த அன்வர் முகம்மட் சஜித் (24 வயது) உயிரிழந்துள்ளதாகவும் அதே இடத்தைச் சேர்ந்த நஸார் பௌஸ் (19 வயது) படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

கடற்றொழிலுக்காக செல்வதற்காக திருகோணமலையிலிருந்து புடவைக்கட்டுக்கு வேகமாக சென்ற மோட்டார் சைக்கிள், பஸ்ஸொன்றினை முந்தி செல்ல முற்பட்ட வேளை மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞனின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here