போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது.

ஹட்டனில் மாவா போதைப்பொருள் மற்றும் என்.சி புகையிலை டின்களுடன் சந்தேகநபர்கள் 6 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ஹட்டன் பேருந்து தரிப்பிட பகுதியில் இன்று பிற்பகல் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, 75 என்.சி புகையிலை டின்கள் உட்பட சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு 80 பக்கட்டுகளில் பொதி செய்யப்பட்ட ஒரு தொகை மாவா போதைப்பொருள் மற்றும் தயாரிப்பிற்கான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த நிலையில் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் மற்றும் போதைப்பொருளை பணம் கொடுத்து வாங்கிய 5 இளைஞர்கள் ஆகியோரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here