மேசன் தொழில் பயிற்சி பெற்றவர்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

மேசன் தொழிலுக்குப் பயிற்சி பெற்ற 400 பயிற்சியாளர்களுக்கு தொழில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு இன்று யாழ். திருமறைக்கலா மன்றத்தில் நடைபெற்றுள்ளதுடன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஏற்பாட்டில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் இணைந்து உபகரணங்களை வழங்கி வைத்துள்ளனர்.

இந்த நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உட்பட வடமாகாண ஆளுநரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் யாழ்.மற்றும் கிளிநொச்சி மாவட்ட முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன், கடந்த மூன்று மாதங்களாக தேசிய வீடமைப்பு அதிகார சபையுடன் சீடா மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபை இணைந்து யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்களுக்கு மேசன் தொழிற்பயிற்சி வழங்கப்பட்டன.

மூன்று மாத பயிற்சியினை நிறைவு செய்த 400 பேருக்கு மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும், 3 மாத பயிற்சியின் போது பயிற்சி பெற்றவர்களுக்கு சீருடைகள் மற்றும் 10 ஆயிரம் ரூபா மாதாந்த கொடுப்பனவுகளுடன் மேசன் தொழில் மேற்கொள்வதற்கான உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.  

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here