மைத்திரி விக்ரமசிங்கவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி மைத்திரி விக்ரமசிங்க நேற்றைய தினம் தனது பிறந்த நாளை கொண்டாடினார்.

பிறந்தநாள் பரிசாக ரணில் விக்ரமசிங்க, தனது மனைவியை மூன்று நாள் விஜயமாக நுவரெலியாவுக்கு அழைத்து சென்றுள்ளார்.

களனி பல்கலைக்கழகத்தின் ஆங்கில பிரிவின் பிரதானியாக செயற்பட்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, 1994ஆம் ஆண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

மைத்திரி விக்ரமசிங்க சுதந்திர கருத்து வெளியிடுவதில் பிரபலமானவர்.

கடந்த மே மாதம் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் மைத்திரி ஆற்றிய உரைக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பாராட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here