ரணிலை எதிர்க்கும் மைத்திரி! அரசியலில் ஏற்பட்டுள்ள திருப்புமுனை?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி எடுத்திருக்கும் முடிவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாகாண சபைகளுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் ஒத்தி வைப்பது தொடர்பான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக மூன்று மாகாண சபைகளுக்கான ஆயுட்காலம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முடிவடைகின்றது. இந்நிலையில் அந்த மாகாணங்களுக்கான தேர்தலை ஒத்திவைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

எனினும் இந்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியானது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியானது இந்த யோசனையை கொண்டு வந்ததுடன், வர்த்தமானியிலும் அறிவித்திருக்கிறது. ஆனால், இதற்கு எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

கூட்டு எதிர்க்கட்சியினர் இந்த யோசனை தொடர்பில் தமது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்நிலையில் பிரதான எதிர்க் கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதற்கான ஆதரவை கொடுப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை வீழ்த்தி கூட்டாட்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் தற்பொழுது மெல்ல மெல்ல விரிசலை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக விமர்சனங்கள் வெளியிடப்படுகின்றன.

மகிந்த தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியானது இந்த சந்தர்ப்பங்களை தமக்கு சாதகமாக்கப் பார்க்கிறார்கள் என்றும் கருத்துக்கள் வெளியாகியிருக்கின்றன.

எனவே, இந்த கருத்து முரண்பாடுகள், அரசியலில் திருப்புமுனையினை ஏற்பட்டு வருவதற்கான சாத்தியப்பாடுகள் இருப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here