வடக்கு, கிழக்கு மக்களை ஏமாற்றும் கூட்டமைப்பு! முரளிதரன்

வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல காலமாக மக்களை ஏமாற்றி வருகிறது என தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் திருகோணமலை மாவட்ட மக்கள் சந்திப்பு இன்று காலை செவிப்புலன் வலுவற்றோர் நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதில் கருத்துத் தெரிவித்த முன்னாள் அமைச்சர்,

வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பல காலமாக மக்களை ஏமாற்றி வருகிறது. அதன் அடிப்படையில் பலமான ஒரு மாற்றுக் கட்சி தமிழ் மக்களுக்குத் தேவை எனும் நோக்கில் நாம் இக்கட்சியை ஆரம்பித்திருக்கின்றோம்.

முன்னாள் போராளிகள் சிறந்த முறையில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும், யுத்தத்தில் கணவனை இழந்த குடும்பத் தலைவிகளது பிரச்சினைகள் இவை தீர்க்கப்பட வேண்டும்.

இந்த அரசாங்கம் ஊழலை ஒழிக்க வேண்டும் என்றே ஆட்சிக்கு வந்தது. இருப்பினும் ஊழல் ஒழிந்ததாக தெரியவில்லை. மகிந்தவின் அரசினை சாடினார்கள். ஆனால் இது வரை அந்த குற்றங்கள் கூட நிரூபிக்கப்படவில்லை.

இவ்வாறிருக்க இந்த அரசிலும் தற்போது ஊழல். அது வட மாகாண சபையையும் விட்டு வைக்கவில்லை என தெரிவித்தார்.

கடந்த அரசு ஆட்சியில் இருக்கும் போது மக்களிடம் பணப்புழக்கம் இருந்தது. அபிவிருத்திகள் நடைபெற்றது. வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டது.

ஆனால் இந்த நல்லாட்சியில் என்ன நடக்கிறது. இந்த அரசிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணை போகின்றது என தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணத்தில் ஒரு தமிழன் முதலமைச்சராக வேண்டும் அதன் மூலமாக வடக்கு, கிழக்கை ஒன்றிணைத்து பல செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும் எனத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவர் விநாயகமூர்த்தி முரளிதரன், கட்சியின் செயலாளர் வர்ணகுலசிங்கம் கமலதாஸ் மற்றும் கட்சியின் மாவட்ட அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here