வவுனியாவில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி

நாட்டின் பல மாவட்டங்களில் டெங்கினால் பல நூற்றுக்கணக்கான உயிர்கள் காவு கொள்ளப்படுவதை தடுப்பதற்காக வவுனியாவில் டெங்கு ஒழிப்பு சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பண்டாரிக்குளத்தில் பிரஜைகள் பொலிஸ் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.

எங்கள் கிராமத்தையும், மக்களையும் பாதுகாத்துக்கொள்ளும் பொருட்டு சுற்றாடலில் நீர் தேங்கி நிற்காத வண்ணம் சுத்தம் செய்வதோடு வீட்டில் தேங்கி கிடக்கும் தேவையற்ற பொருட்களை அகற்றி வேறுவேறாக பிரித்து இன்றைய தினமும், நாளைய தினமும் பண்டாரிக்குளத்தில் மேற்கொள்ளப்படவுள்ளது.

டெங்கு ஒழிப்பு சிரமதானப் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களை ஏற்பாட்டுக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கை சுகாதார பரிசோதகர்களின் பங்கு பற்றலுடன், நகரசபை ஊழியர்கள், கிராம மக்களின் பங்களிப்புடன் இடம்பெற்று வருகின்றது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here