விஜயதாச ராஜபக்சவிற்கு ஆதரவாக களமிறங்கும் சுதந்திரக் கட்சி.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அதற்கு எதிராக செயற்பட உள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரான இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.

ஹாலி- எல பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரவி கருணாநாயக்க அமைச்சுப் பதவியிலிருந்து விலகியதுபோல அரசியலிலிருந்து விலகவேண்டிய சிலர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பதாகவும் டிலான் பெரேரா கூறியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here