வேண்டும் என்றால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்கட்டும்

தமிழ் மக்களின் இன்றைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட வட மாகாணசபை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா தெரிவித்துள்ளார்.

இன்றைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து யாழ். ஊடக அமையத்தில் கருத்து தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ் ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட தம்பிராசா,

வட மாகாண சபையை கலைக்க வேண்டும் என்று கூறுகின்ற வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வேண்டுமானால் தன்னுடைய எதிர்க்கட்சி தலைவர் பதவியை முதலில் இராஜினாமா செய்ய வேண்டும்.

பதினாறாயிரத்திற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகளின் குடும்பத்தினர் வாழ்வாதார உதவிகள் தேவை என்று வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்கள்.

கடந்த 30 வருட போராட்டத்தினால் பாதிக்கப்பட்ட போராளிகளும், பாதிக்கப்பட அனைத்து மக்களும் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவர்களது பொருளாதாரம் வளம் பெற நாம் அயராது பாடுபடவேண்டும்.

இதற்கு அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இந்நிலையில் தமிழ் மக்களின் இன்றைய நல்வாழ்வுக்காக உருவாக்கப்பட வட மாகாண சபை ஆட்சியை கலைக்க வேண்டும் என்று வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கூறுவதை நாம் வன்மையாக கண்டிக்கிறோம்.

அப்படிக் கூறும் அவர் வேண்டுமானால் தனது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை துறக்கட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here