அமெரிக்காவில் உயர் பதவியில் பணியாற்றிய இலங்கையருக்கு நேர்ந்த கதி!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உயர் பதவி வகிக்கும் இலங்கையரின் விலை மதிப்பு மிக்க தொலைபேசி மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நியூயோர்க் நகரின் மேயர் Bill de Blasioவிடம் உதவியாளராக செயற்படும் இலங்கையரின் கையடக்கத் தொலைபேசியே திருடப்பட்டுள்ளது.

Manhattan என்ற சுரங்கப் பாதையில் அவர் பயணித்த போது அவரது ஐ போன் இவ்வாறு திருடப்பட்டுள்ளது.

துணை தகவல்தொடர்பு இயக்குநராக செயற்படும் மஹேன் குணரத்ன என்ற 30 வயதுடைய இலங்கையரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுரங்கப் பாதையினுள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்த போது தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியை இருவர் இணைந்து திருடியுள்ளதாகவும், சந்தேக நபர்கள் 17 – 20 வயதான கறுப்பினத்தவர்கள் எனவும் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.

குணரட்ன Blasio நிர்வாகத்தில் ஆராய்ச்சி மற்றும் ஊடக ஆய்வு இயக்குனராக பணி புரிந்தார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் நடவடிக்கையில் பணியாற்றுவதற்காக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சிட்டி ஹால் பகுதியை விட்டு வெளியேறினார்.

தொலைபேசி திருடப்பட்டதன் பின்னணியில் உளவுத் தகவல்களை பெற்றுக் கொள்பவர்களின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here