அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக முறைப்பாடு செய்ய தயாராகும் ஜீ.எம்.ஓ

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மாலபே நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் செய்துக்கொள்ளப்பட்ட உடன்படிக்கை மூலம் சுகாதார அமைச்சர் ஏமாற்றியுள்ளதாக அந்த சங்கம் கூறியுள்ளது.

குறித்த வைத்தியசாலை அரசுடமையாக்கப்படவில்லை என தாம் மேற்கொண்ட தேடுதலில் தெரியவந்துள்ளதாகவும் இவ்வாறான நிலையில், அந்த வைத்தியசாலைக்கு அரசாங்கம் நிதியை ஒதுக்குவது பொது நிதியை தவறாக பயன்படுத்துவதாகும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது..

இதனை காரணமாக கொண்டு அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ய உள்ளதாகவும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here