ஆளுங்கட்சிக்குள் அடிதடி! கூட்டு எதிர்க்கட்சி கிண்டல்

ஆளுங்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள அடிதடி சர்வதேச அளவில் கேலிக்குரியதாகிப் போயுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி கிண்டல் அடித்துள்ளது.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கை இல்லாப் பிரேரணை குறித்து கருத்து வெளியிடும்போதே கூட்டு எதிர்க்கட்சியின் முக்கியஸ்தரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்சா இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிராக அவர் சார்ந்த ஆளுங்கட்சியே நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டுவரவுள்ளது.

உலகில் எங்குமே ஒரு அரசாங்கத்தின் அமைச்சருக்கு எதிராக அதே ஆளுந்தரப்பில் இருந்து நம்பிக்கை இல்லாப் பிரேரணை கொண்டு வரப்படுவதில்லை.

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியில் சிறப்பாகவும், நேர்மையாகவும் செயற்பட்டதற்கான பரிசே இந்த நம்பிக்கை இல்லாப் பிரேரணையாகும்.

இதற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி விஜேதாச ராஜபக்ஷவுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும்.

எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் 52 பேரும் விஜேதாச ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here