இந்தோனேஷியாவில் நிலநடுக்கம்

இந்தோனேஷியாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

சுமத்திரா தீவிலேயே இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 6.5ஆக பதிவாகியுள்ளது.

பெங்குழு நகரிலிருந்து 73 கிலோமீற்றர் தொலைவில் 35 கிலோமீற்றர் ஆழத்தி;ல் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது என அமெரிக்க புவியியல் நிலையம் தெரிவித்துள்ளது.

இருப்பினும், அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

இந்த நிலநடுக்கம் காரணமாக, அச்சம் அடைந்த குடியிருப்பாளர்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் எதுவித தகவலும் இதுவரையில் வெளியாகவில்லை.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here