இனப்படுகொலை செய்த கருணா மீது விசாரணை வேண்டும்!

முஸ்லிம் சமூகத்தை அழிக்க தலைமை தாங்கிய கருணா மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஏறாவூரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் கிழக்கில் இனப்படுகொலை செய்து முஸ்லிம் சமூகத்தை அழிக்க கருணா தலைமை தாங்கினார். இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

தற்போது கருணா முஸ்லிம்களைப் பற்றி வெளியிடும் கருத்துக்களின் மூலம் ஒரு விடயம் தெளிவாக புரிகின்றது.

அதாவது கருணா ஆயுத பலத்தோடு இருந்த காலத்தில் முஸ்லிம்கள் மீது எவ்வாறு இனப்படுகொலைகளை செய்திருப்பார் என்பது தெரிவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் மற்றும் தமிழ் சமூக உறவை சீரழிக்க நினைக்கின்ற கருணா போன்றவர்களுக்கு காலம் தக்க பதிலளிக்கும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here