இலங்கைக்கு அதிகரிக்கும் வெளிநாட்டு நிதியுதவி!

இலங்கையில் இவ்வருடத்தில் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 24 கோடி 40 இலட்சம் அமெரிக்க டொலருக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதில் 17 கோடி 40 அமெரிக்க டொலர்களுக்கான கடன் உடன்படிக்கையும் இடம்பெற்றுள்ளது. எஞ்சியவை நேரடி முதலீடாக கிடைத்துள்ளது.

இருதரப்பு மற்றும் பலதரப்பு என்ற ரீதியில் இந்த நிதியுதவி கிடைத்துள்ளது. ஆகக் கூடுதலான நிதியுதவியை உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி பிரிவு வழங்கியுள்ளது.

இதன் பெறுமதி 12 கோடி அமெரிக்க டொலர்களாகும் பெருமளவிலான நிதியுதவி விவசாய அபிவிருத்திகாக பயன்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here