கிழக்கில் முஸ்லீம்களை கட்டுப்படுத்த வேண்டும் : சுமனரத்ன தேரர்

தமிழ் மக்களின் உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அத்துமீறி முஸ்லீம் குடியேற்றங்களை அமைக்கும் முயற்சிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் துணை போவதாக மங்களராமய அம்பிட்டிய சுமனரத்ன தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணி அபகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளில் தலையிடும் போது அதனை இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சி செய்யப்படுவதாக அவர் சாடியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அம்பிட்டிய சுமனரத்ன தேரர்

இதுவரை கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தை மாத்திரம் எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களை போன்று சிங்கள மக்களின் காணிகளும் பாரிய அளவில் கொள்ளை அடிக்கப்படுகின்றன.

1980 ஆம் ஆண்டு வரை இருந்த சொத்துக்கள் மற்றும் காணிகள் என அனைத்தும் கொள்ளை அடிக்கப்படுகின்றன.இதனை தடுப்பதற்கான தேவை எழுந்துள்ளது.

வாழைச் சேனை மீராவோடை பகுதியிலுள்ள தமிழ் மக்களின் கிராமத்தில் விசேடமாக மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்டு வீடுகளைப் போன்று அந்த கிராமமக்களின் சுவர்ணபூமி உறுதிப்பத்திரமுள்ள காணிகளுக்குள் அநாவசியமாக சில முஸ்லீம் அமைப்புக்கள் உள்நுழைந்து அந்த கிராம மக்களுக்கு விளைவிக்கும் இடையூறுகள் தொடர்பில் கடந்த மாதம் தெரியப்படுத்துவதற்கு முயற்சித்தேன்.

அன்று தொடக்கம் இன்று வரை மாவட்ட செயலாளர் அதேபோன்று கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர், வாழைச் சேனை பிரதேச செயலாளர் திருகோணமலை காணி ஆணையாளர் என அனைத்து அதிகாரிகளையும் இந்த மாதத்திற்குள் நான்கு தடவைகள் நான் சந்தித்துள்ளேன்.எனினும் சாதாரண பதில் கூட அந்த பகுதி மக்களுக்கு வழங்கப்படவில்லை.

அரசியல் தலைவர்களின் விரும்பங்களை நிறைவேற்றுவது மாத்திரமே இங்கு நடைபெறுகின்றது.

இது கீழ்மட்டத்திலுள்ள அப்பாவி மக்கள் உருவாக்கும் பிரச்சினை அல்ல.இது அரசியல் தலைவர்களால் உருவாக்கப்படும் பிரச்சினை என்பது மிகத் தெளிவாக எமக்கு தெரிகின்றது.

கல்லடியில் நீர்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான பாரிய இடம் கடந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் வீடுகளை நிர்மாணிப்பதற்கென குறிப்பிட்ட ஏக்கரை ஒதுக்குவதென அமைச்சர் ஹிஸ்புல்லாவினால் உறுதிப்படுத்தப்படுகின்றது.அங்கு இருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனுமதியை கொடுக்கின்றனர்.

ஏனைய அரச அதிகாரிகளும் அனுமதியை கொடுக்கின்றனர்.இந்த வீடுகள் நிர்மாணிக்கப்படும் பகுதி தமிழர்கள் வசிக்கும் பிரதேசம்.அந்த பகுதியில் முஸ்லீம் மக்களுக்கான கிராமமொன்றை அமைக்கும் இந்த பிரச்சினை குறித்து அரசியல் தரப்பிற்கும் அரச நிர்வாக தரப்பிற்கும் கூறுவதற்கும் முடியாதபட்சத்தில் பிரச்சினைக்கு தீர்வொன்றை பெற்றுத்தருமாறு எம்மிடமே வருகின்றனர்.

இவ்வாறான விடயங்களில் இவ்வாறான பிரச்சினைகளில் தலையிடும் போது நாங்கள் முன்னிலையாகும் போது இது இனவாதமாகவும் மதவாதமாகவும் சித்திரிக்க முயற்சிக்கின்றனர்.

இதில் இனவாதம் இல்லை மதவாதம் இல்லை என்பதை கிழக்கில் உள்ளிட்ட நாடு பூராகவும் உலகத்திலும் உள்ள தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுக்கு கூறவிரும்புகின்றேன்.

அரச தலைவர்களும் அரச அதிகாரிகளும் ஒன்றிணைந்து 24 மணித்தியாலத்திற்கு தீர்வு காணக் கூடிய பிரச்சினை.இதற்கு அப்பாவித் தமிழர்கள் வந்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் சத்தமிடுவதற்கும் கோரிக்கை விடுப்பதற்குமான பிரச்சினை அல்ல.அவர்களுக்கு சுவர்ணபூமி உறுதிப்பத்திரம் கைகளில் உள்ளது.

அத்துடன் இந்த உறுதிப்பத்திரத்தை அடிப்படையாக கொண்டு பிரதேச செயலாளர் வாழைச் சேனை பொலிஸ்சில் முறைப்பாடும் செய்யப்பட்டுள்ளது.

எனினும் எந்தவொரு முறைப்பாடும் விசாரணை செய்யப்படவில்லை.அப்பாவி மக்களும் சென்று முறைப்பாடு செய்துள்ளனர்.எந்தவொரு முறைப்பாடும் விசாரணை செய்யப்படவில்லை.

அவ்வாறாயினும் இதற்கு யார் பொறுப்பு கூற வேண்டும்.?பொறுப்புகூற வேண்டியவர்கள் முன்னிலையாகி, ஏனைய அரச அதிகாரிகளும் முன்னிலையாகி இந்த பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிடின், எதிர்வரும் வாரத்திற்குள் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ளவர்கள் மாத்திரமல்ல நாடுபூராவும் பரந்துவாழும் தமிழ் மக்களுடன் கலந்துரையாட திட்டமிட்டுள்ளோம்.

இந்த மக்களின் அடிப்படைத் தேவைகள் குறித்து எந்தவொரு தலைவர்களும் இல்லாத காரணத்தால் தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.தலைவர்கள் இல்லாத காரணத்தால் எங்களிடம் வந்து அவர்கள் கூறுகின்ற போது தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது.தமிழ் மக்கள் 30 வருடகால யுத்தத்தின் பிடியில் இருந்த மக்கள்.

வடக்கு கிழக்கில் உலகில் எந்தபகுதியில் வாழும் யார் வேண்டுமானாலும் இதனை ஆராய்ந்து பார்க்க முடியும்.வடக்கு கிழக்கில் சுயாட்சி ஈழம் கோரி போராடியவர்களே தமிழ் மக்கள்.எனினும் தற்போது தமிழ் மக்களுக்கு என்ன நடந்துள்ளது?

அவர்களின் பிரச்சினை தெய்வத்திற்கு கூட கேட்காத ஒன்றாாக மாறியுள்ளது.அறுகம்பை தொடக்கம் பொத்துவில் தொடக்கம் மறுபுறம் மூதூர் தோப்பூர் வரை தொடர்ச்சியாக ஒரே நகரமாக மாற்றுவதற்கு முஸ்லீம் அமைப்புக்களுக்கு மாற்ற முடிந்துள்ளது என அவர் மேலும் கூறியுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here