கென்ய வன்முறையில் 100 பேர் கொலை

கென்யாவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவத்தில் 100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கென்யாவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில், தற்போதைய ஜனாதிபதியான உஹுரு கென்யாட்டா அதிகளவான வாக்குகளைப் பெற்று மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், உஹுரு கென்யாட்டா வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணையகம் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

இருப்பினும், இந்தத் தேர்தல் முடிவுகளை எதிர்க்கட்சியினர் நிராகரித்துள்ளனர். அங்கு நேற்று (சனிக்கிழமை) வன்முறைச் சம்பவம் வெடித்துள்ளது. இதில் 100 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் அவர் கூறினர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here