சட்டமா அதிபர் திணைக்களம் குறித்து பிரதமருடன் கலந்தாலோசிக்க தீர்மானம்

சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எதிர்வரும் வாரத்தில் பிரதமருடன் கலந்தாலோசிக்க ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

தற்போதைய நிலையில் கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு எதிரான வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதுடன், ஐக்கிய தேசியக்கட்சியுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான வழக்குகளில் மட்டும் ஒரு இறுக்கமான போக்கு கடைப்பிடிக்கப்படுகின்றது.

சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இந்த விடயத்தில் இரட்டைப் போக்கைக் கடைப்பிடிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியுடன் உள்ளனர்.

இதுதொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடுவதற்காக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று தீர்மானித்துள்ளது.

குறித்த கலந்துரையாடலில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here