சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரியை தாக்கிய தமிழருக்கு 6 மாதம் சிறை.

சிங்கப்பூரில் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய வழக்கில் தமிழர் ஒருவருக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் வசித்து வரும் ராமசாமி சுகுமார் (வயது 59) என்பவருக்கே இவ்வாறு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர், ஏற்கனவே 11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை முடிந்து வந்த நிலையில், பாடசாலை ஒன்றில் சுத்தப்படுத்தும் பணியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் 30ஆம் திகதி, அங்கு புகை பிடிக்க தடை விதிக்கப்பட்ட ஒரு இடத்தில் நின்று, சிகரெட் பாவனையில் ஈடுபட்டுள்ளார்.

இது தொடர்பாக அவரை விசாரணைக்கு வருமாறு தேசிய சுற்றுச்சூழல் முகமை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

இந்த நிலையில், ஆஜரான அவர் தேசிய சுற்றுச்சூழல் முகமை அதிகாரி குகன் சந்திரசேகரன் என்பவரை தமிழில் ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை தாக்கியுள்ளார்.

இதையடுத்து, தாக்குதலுக்கு ஆளான குகன் சந்திரசேகரன், பொலிஸ் அதிகாரிகளை உதவிக்கு அழைத்துள்ளனர்.

அவர்கள் வந்த பிறகும், ராமசாமி சுகுமார் அடங்கவில்லை. மாறாக பொலிஸ் அதிகாரி கிறிஸ்டியன் டான் என்பவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து அவர் மீது மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணையின் போது, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஹர்ஜித் கவுர், குடிபோதையில் தன் கட்சிக்காரர் அப்படி நடந்து கொண்டதாக கூறி, கருணை காட்டுமாறு வேண்டிக்கொண்டுள்ளார்.

இதேவேளை, இதையடுத்து தொடர்ந்து 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி இம்ரான் அப்துல் ஹமித் உத்தரவிட்டுள்ளாதாகவும் குறித்த இந்திய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here