டெங்கு பரவும் வகையில் சுற்­றா­டலை வைத்­தி­ருந்த 182 பேருக்கு எதி­ராக வழக்கு

டெங்கு நுளம்பு உற்­பத்­தி­யாகும் வகையில் சூழலை வைத்­தி­ருந்த குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் இவ்­வாண்டில் இது­வரை 182 வழக்­குகள் பதிவு செய்­யப்­பட்­டி­ருப்­ப­தாக மாத்­தளை சுற்­றாடல் பாது­காப்பு பொலிஸ் பொறுப்­ப­தி­காரி எச்.எம்.பி.கே. ஏக்­க­நா­யக்க தெரி­வித்தார்.

மேற்­படி வழக்­கு­கள்­மூலம் தண்­டப்­ப­ண­மாக இரண்டு இலட்­சத்து 85 ஆயிரம் ரூபா அற­வி­டப்­பட்­டி­ருப்­ப­தா­க தெரி­வித்த அவர், இது தொடர்பில் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு பல­முறை விசேட அறி­வு­றுத்­தல்கள் வழங்­கப்­பட்டு வந்­த­தா­கவும் குறிப்­பிட்டார்.

எனினும் இதனைக் கடைப்­பி­டிக்­காத குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு எதி­ரா­கவே வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­ட­தா­கவும், டெங்கு நுளம்பு ஒழிப்பு விட­யத்தில் பொலி­ஸா­ரி­னதோ அரச சுகா­தாரப் பிரி­வி­ன­ரதோ வேலைத்திட்டங்களுக்கு அப்பால் பொதுமக்களின் ஒத்துழைப்பே முக்கியமானதெனவும் கூறினார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here