டெனீஸ்வரன் இராஜினாமா? நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பு

வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் தனது அமைச்சு பதவியில் இருந்து இராஜினாமா செய்வது தொடர்பில் நாளை உத்தியோகபூர்வ அறிவிப்பை விடுக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரெலோவின் தலைமைக்குழு நேற்று காலை வவுனியாவில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் போது வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனும் கலந்து கொண்டிருந்தார்.

குறித்த தலைமைக்குழு கூட்டத்தில் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரனை முதலமைச்சரின் அமைச்சரவை மாற்றத்திற்கு வழிசமைக்கும் முகமாக அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு ரெலோ தலைமைக் குழு கோரியிருந்தது.

எனினும் உடனடியாக பதவி இராஜினாமாவிற்கு மறுப்பு தெரிவித்து வந்த அமைச்சர் பா.டெனீஸ்வரன் இதற்கான கால அவகாசத்தை கோரியிருந்தார். இந்த நிலையில் கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக தனது முடிவை இன்று அறிவிப்பதாக அமைச்சர் குறித்த கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும் எவ்வித முடிவுகளையும் அமைச்சர் இன்றைய தினம் அறிவிக்கவில்லை என தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், வட மாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சு பதவி இராஜினாமா தொடர்பில் நாளை உத்திகோக பூர்வமாக அறிவிக்கவுள்ளேன். வடக்கு முதலமைச்சரின் செயற்பாடுகள் குறித்து நான் கவலை அடைகின்றேன்.

கட்சியின் கோட்பாடுகளுக்கு அமைவாக எனது உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளைய தினம் அறிவிக்கவுள்ளேன் என வட மாகாண அமைச்சர் டெனீஸ்வரன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here