நல்லூரான் புகழ்பாடும் பக்திப்பாமாலை! இறுவட்டு வெளியீட்டு விழா

வரலாற்றுப் பிரசித்திப்பெற்ற யாழ். நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பமாகியுள்ள நிலையில் முருகப்பெருமானின் புகழ்பாடும் “நல்லூரான் பக்திப்பாமாலை” எனும் இறுவட்டு வெளியீட்டு விழா 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை சிறப்புற இடம்பெற்றது.

நல்லூர் வீதியிலுள்ள நடராச பரமேஸ்வரி மண்டபத்தில் தெய்வீக இசைச் சங்கமத்துடன் நல்லூரான் பக்திப்பாமாலை நல்லூர் கந்தனின் மெய்யடியார்களில் ஒருவரான தர்மராஜாவால் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.

இதன்போது பல்வேறு கலைநிகழ்ச்சிகளும், இசைநிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன.

குறித்த இறுவட்டு வெளியீட்டு நிகழ்விற்கு சமயகுருமார்கள், சமயபெரியோர்கள், மாணவர்கள், நல்லூர்கந்தன் மெய்யடியார்கள், பக்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here