பயத்துடன் வாழக்கூடிய நிலை அமையக்கூடாது.

குடிமக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும், பயத்துடனும் வாழக்கூடிய நிலை அமையக்கூடாது என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக சட்டபீட மாணவர்களால் தொகுக்கப்பட்ட ‘நீதம்’ என்ற நூல் வெளியீட்டு விழா யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று இடம்பெற்றது.

இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே நீதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

நீதித்துறையின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறன் பெற வேண்டும் என்பதில் எம் அனைவருக்கும் எந்தவித ஐயமுமில்லை. குற்றவியல் நீதித்துறை தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும்.

அவதானம் செலுத்துவது என்பது வெறுமனே தண்டனை வழங்குவதாக அர்த்தப்படாது, குற்றங்களைப் புரிபவர்களுக்கு அனைத்து வழிகளிலும் நீதியான செயற்பாடுகளை முன்னெடுப்பதுடன், குற்றம் புரிபவர்கள் தப்பிச் செல்வதையும் இது பொருள்படுத்தும்.

மேலும், குடிமக்கள் பாதுகாப்பற்ற நிலையிலும் பயத்துடனும் வாழக்கூடிய நிலை அமையக்கூடாது என்றும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here