பலாங்கொடையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி.

பலாங்கொடை பிரதேசத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் பலத்த காயங்களுடன் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பலாங்கொடையை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here