பிரதேச செயலாளரின் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து.

காரைதீவில், பிரதேச செயலக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

குறித்த விபத்து காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலய சுற்றுவட்டத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதேச செயலக வாகனம் சுற்றுவட்டத்தினால் காரைதீவிற்குள் செல்ல முற்படுகையில் கல்முனைப் பக்கமிருந்து வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குறித்த வாகனத்துடன் மோதியுள்ளதாக கூறப்படுகிறது. .

இந்த நிலையில் விபத்தில் இருவர் காயமடைந்துள்ளதுடன், இருவரும் காரைதீவு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவர் கல்முனை அஸ்ரப் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here