போதைப் பொருள் கடத்தலை ஒழிப்பதில் சிரமம்.

இலங்கையின் அமைவிடம் காரணமாக நாட்டின் ஊடாக நடக்கும் போதைப் பொருள் கடத்தல்களை ஒழிக்கும் நடவடிக்கை சிரமமானதாக மாறியுள்ளதாக அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக சர்வதேச உதவிகளை பெற்று போதைப் பொருள் கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஒழுங்கு செய்த, போதைப் பொருள் எதிர்ப்பு நடை பயணத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனி கொள்கலன்களை தீவிர பரிசோதனைக்கு உட்படுத்த இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பொலிஸ் போதைப் பொருள் தடுப்பு பிரிவினருடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்க உள்ளதாக சுங்க திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சுனில் ஜயரத்ன கூறியுள்ளார்

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here