யாழில் இளைஞன் மீது கடும் தாக்குதல்!

யாழ்ப்பாணம் நாவற்குளி பகுதியில் இளைஞர் ஒருவர் மீது மர்மநபரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாவற்குளி ஐயனார் கோவிலடியைச் சேர்ந்த 30 வயதான தங்கராசா றொசான் என்பவர் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருந்த நிலையில், அவர் மீது கடும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற போதும், தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

குறித்த நபர் சம்பவதினம் இரவு தோட்டத்தில் வேலை செய்துள்ளார். அப்போது யாரோ தோட்டத்துக்கு வெளியே நின்று அழைக்கும் குரல் கேட்டுள்ளது.

குரல்கேட்டு வெளியே வந்த அவரை மர்மநபர் ஒருவர் பொல்லால் தாக்கிவிட்டு தப்பியோடியுள்ளார்.

தாக்குதலால் தலையில் காயமடைந்த றொசன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here