வேறு அரசாங்கம் தேவையில்லை – விக்ரமபாகு கருணாரட்ன

அரசாங்கத்தில் சில தவறுகள் இருந்தாலும் வேறு அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்தும் தேவையில்லை என நவசமசமாஜக் கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் சிறிய தவறுகள் ஏற்படுகின்றன. அந்த தவறுகளை திருத்திக் கொள்ளுமாறு மக்களுடன் இணைந்து அழுத்தங்களை கொடுப்போம்.

அத்துடன் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். வாக்குறுதிகளை மீறிச் செல்ல இடமளிக்க போவதில்லை.

வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு கோரி சிவில் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என தற்போதைய அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வர பங்களிப்பு செய்த அனைத்து தரப்பினரும் இணைந்து விகாரமஹாதேவி பூங்காவில் எதிர்வரும் 15 ஆம் திகதி சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை நடத்த உள்ளதாகவும் விக்ரமபாகு கருணாரட்ன குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here