113 ஆசனங்கள் இருக்குமாயின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.

113 ஆசனங்கள் இருக்குமாயின் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கினிகத்தேனை பிரதேசத்தில் வாழும் மக்கள் மத்தியில் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்யும் வகையில் இன்றைய தினம் (13) விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்விற்கு, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாஸவின் அழைப்பின் பேரில் வருகை தந்த கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாத் பதியுதீனிடம் ஊடகவியலாளர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர்,

கடந்த 1948ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின் இந்த நாட்டில் இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து நல்லாட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கின்றமை வரலாற்றிற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளை சார்ந்த இரு தலைவர்கள் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கத்தில் அடிமட்டத்திலுள்ள ஒரு சிலரின் கருத்து வேறுபாடு காரணமாக குழப்ப நிலைமைகள் உருவாக்கபடுகின்றது எனவும் கூறியுள்ளார்.

புதிய அரசியல் அமைச்சின் ஊடாக அரசாங்கத்தை தொடர்ந்தும் கொண்டு செல்ல கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாலரை வருடத்திற்கு பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடம் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

எனினும், தொடர்ந்தும் இந்த அரசாங்கத்தை வழிநடத்தி செல்ல இரு தலைவர்களும் உருவாக்கிய நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்தும் இருக்கும் எனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here