யாழ். சென்ற புகையிரதத்துடன் மோதுண்ட முச்சக்கர வண்டி! இளைஞன் பலி

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியாவில் பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடந்து செல்ல முற்பட்ட முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இன்று பிற்பகல் 4.30 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் பயணித்த போது அப்பகுதியில் இருந்த பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையை கடந்து சென்ற முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்து இடம்பெற்ற இடத்தில் இருந்து முச்சக்கர வண்டி 500மீற்றர் தூரத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டது. இவ்விபத்தில் முச்சக்கர வண்டி சாரதியான ஈச்சங்குளம் பகுதியைச் சேர்ந்த எஸ்.கிருபா (வயது 28) என்பவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here