வரலாற்றில் ஓர் மைல் கல்: பாகிஸ்தான் செல்கின்றது இலங்கை அணி

இந்தியாவிற்கு எதிரான போட்டிகளில் தற்போது விளையாடி வரும் இலங்கை அணி அதன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளது.

மேலும், பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தில் இலங்கை அணி 3 டி-20 போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அதில் ஒரு போட்டி லாகூர் மைதானத்தில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

2009ஆம் ஆண்டு பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் பின்னர் எந்தவொரு நாடும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளவில்லை என்பதும் பாகிஸ்தானில் இடம் பெற வேண்டிய போட்டிகள் அனைத்தும் டுபாயிலேயே நடைபெற்று வந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மீண்டும் இலங்கை பாகிஸ்தான் சுற்றுப்பயணத்தினை மேற்கொள்ளவுள்ளமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் போட்டிகளுக்கு பலத்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here