யாழில் மீன் பிடிக்கச்சென்ற இளைஞன் பரிதாபமாக மரணம்!

யாழ் – குருநாகர் பகுதியில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று இரவு வேளையில் நடந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு நண்பர்களுடன் மீன் பிடிப்பதற்கு கடலுக்கு சென்ற போதே குறித்த இளைஞன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதில், குருநகர் – கடற்கரை வீதியைச் சேர்ந்த பற்றிக் நிரஞ்சன் என்ற 28 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தியாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here