நெடுந்தீவு வைத்தியசாலை விவகாரம் குறித்து கடிதம் அனுப்ப தீர்மானம் நிறைவேற்றம்

நெடுந்தீவு வைத்தியசாலையில் தொடரும் வைத்தியர் பற்றாக்குறை தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று காலை நடைபெற்று வருகின்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது நெடுந்தீவு வைத்தியசாலை தொடர்பில் பிரதேச செயலாளர் ஜெயகாந்தன் சில கருத்துக்களை முன்வைத்தார்.

“நெடுந்தீவில் கடந்த மூன்று தினங்களாக வைத்தியர்கள் இல்லாத காரணத்தினால் நோயாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.

இங்கு கடமையாற்றிய 2 வைத்தியர்களும் தற்போது இல்லை. இதனால் ஊர்காவற்துறையிலிருந்து வைத்தியர் ஒருவர் தற்காலிகமாக இங்கு கடமை புரிகின்றார்.

மேலும், வைத்திய வசதிகளும் இங்கு போதாமல் உள்ளது, தாதியர் பற்றாக்குறையும் காணப்படுகின்றது. நெடுந்தீவு பிரதேசத்திற்கு இந்த ஒரு வைத்தியசாலையே காணப்படுகின்றது.

இதனால் பாதிக்கப்படும் நோயளர்கள் வேறு வைத்தியசாலையை நோக்கி செல்கின்றனர். குறிப்பாக ஊர்காவற்துறை மற்றும் யாழ்.போதனா வைத்தியசாலை என செல்கின்றனர்.

இது பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது.” எனவும் நெடுந்தீவு பிரதேச செயலாளர் ஜெயகாந்தன் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து வடமாகாண சுகாதார அமைச்சுக்கு கடிதம் ஒன்றை அனுப்புவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here