கொத்மலை நீர்த்தேக்கத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு

நுவரெலியா – கொத்மலை நீர்த்தேக்கத்தில் நன்னீர் மீன் குஞ்சுகள் விடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் நடைபெற்றுள்ளதுடன், கொத்மலை நீர்த்தேக்கத்தில் மீன்குஞ்சுகள் விடப்பட்டுள்ளன.

அத்துடன், இந்த நிகழ்வு மத்திய மாகாண தமிழ் கல்வி, விவசாயம், மீன்பிடி, சிறுகைதொழில், இந்து கலாச்சார அமைச்சர் எம். ரமேஸ்வரன் தலைமையில் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது சுமார் எழுபதாயிரம் மீன்குஞ்சுகள் நீர்த்தேக்கத்தில் முதற்கட்டமாக விடப்பட்டது. இதில் டிலாபியா, கேட்லா, காப் போன்ற இன மீன்குஞ்சுகள் இவ்வாறு விடப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here