தெலுங்கில் விரைவில் வெளியாகும் பிரபாகரன் திரைப்படம்!

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தை கதைக்களமாக கொண்டு தெலுங்கில் உருவாகியிருக்கும் “ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, எதிர்வரும் 19ஆம் திகதி குறித்த திரைப்படத்தின் முன்னோடி காட்சி (trailer) வெளியிடப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

“ஒக்காடு மிகிலாடு” Okkadu Migiladu என்ற திரைப்படத்தில் விடுதலைப் புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கதாபாத்திரத்தில், தெலுங்கு நடிகர் மஞ்சு மானோஜ் நடித்துள்ளார்.

“ஒக்காடு மிகிலாடு” படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள மஞ்சு மானோஜ், அதில் ஒரு கதாபாத்திரம் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here