நுவரெலியா மாவட்டத்திற்கான புதிய உள்ளூராட்சி சபைகளை அமைக்க இணக்கம்

நுவரெலியா மாவட்டத்திற்கான புதிய உள்ளூராட்சி சபைகளை அமைப்பதற்கான உடன்பாட்டை கட்சி தலைவர்கள் வெளியிட்டுள்ளனர்.

கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இந்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் முரண்பட்ட நிலையில் தாம் வெளி நடப்பு செய்ததாக அமைச்சர் மனோ கணேசன் ஏற்கனவே ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் அவர் கூட்டத்தில் இருந்து சென்ற பின்னர் கட்சி தலைவர்களுக்கு, தொழிலாளர் தேசிய முன்னணியின் தலைவர் அமைச்சர் பி.திகாம்பரம் நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளின் அவசியம் குறித்து விளக்கியுள்ளார்.

இரண்டு லட்சம் மக்களுக்கு ஒரு பிரதேசசபை என்பது மாத்திரம் அல்ல. அங்கு, பிரதேசசபையில் பணி ஒன்றை மேற்கொள்வதற்காக பொதுமகன் ஒருவர் சுமார் 60 கிலோமீற்றர் வரை பயணம் செய்யவேண்டியுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பிரதிநிதிகள் உட்பட்ட அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த விடயம் குறித்து உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதென்று நேற்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here