வடமாகாண சபையில் 4 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

வடமாகாண சபையில் புதிய அமைச்சர்கள் இருவருடன் வட மாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

சுகாதாரம் மற்றும் விவசாய அமைச்சர்களாக நியமிக்கப்பட்ட சிவநேசன் மற்றும் குணசீலன் ஆகியோர் வடமாகாண ஆளுநர் முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்து தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டனர்.

வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் இன்று (23) அமைச்சுப் பதவிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு இடம்பெற்றது.

குறித்த நால்வரும் வடமாகாண ஆளுநர் முன்னிலையில், சத்தியபிரமாணம் செய்துகொண்டனர்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு நிதி மற்றும் திட்டமிடல், சட்டம் மற்றும் ஒழுங்கு, காணி, மின்சாரம், வீடமைப்பு மற்றும் புனரமைப்பு, சுற்றுலா, உள்ளுராட்சி, மாகாண நிர்வாகம், நகர அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, போக்குவரத்து, மோட்டார் போக்குவரத்து உள்ளிட்ட அமைச்சுகள்.வடமாகாண விவசாயம், நீர்ப்பாசனம், கால்நடை, மீன்பிடி, சுற்றுச்சூழல் அமைச்சராக புளொட் அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் கந்தையா சிவநேசன் சத்தியப்பிரமாணம் செய்து கடமைகளை பொறுப்பேற்றார்.சுகாதாரம், சுதேச மருத்துவம், சிறுவர் விவகார அமைச்சராக ரெலோ அமைப்பின் மன்னார் மாவட்ட மாகாணசபை உறுப்பினர் வைத்தியக்கலாநிதி ஞானசீலன் குணசீலன் பொறுப்பேற்றுக் கொண்டார்.வடமாகாண பெண்கள் விவகாரம், புனர்வாழ்வு, சமூக சேவை, கூட்டுறவு, வர்த்தக வாணிபம், உணவு வழங்கல் விநியோகம் சிறுதொழில் முயற்சி ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக வாணிப அமைச்சராக அனந்தி சசிதரனும் வடமாகாண ஆளுனர் முன்னிலையில் சத்தியப்பிரமானம் செய்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here