பாடசாலை மாணவர்களுக்கு கிடைக்கவுள்ள வரப்பிரசாதங்கள்!

5 – 19 வயதுக்கு இடைப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் தலா 200,000 பெறுமதியான காப்புறுதி இலவசமாக பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்காக 4.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக 2017ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 2,700 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.

இந்த திட்டத்தின் ஊடாக வெளி சிகிச்சைகளுக்காக 10,000 ரூபாவும், வைத்தியசாலையில் அனுமதி பெற்று சிகிச்சை பெறும் குறித்த வயது மாணவர்களுக்கு 100,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது.

மேலும், பாடசாலை மாணவர்களின் அவசர மரணத்தின் போது குறித்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு 100,000 ரூபாவும், தமது தாய் அல்லது தந்தை மரணத்துக்காக குறித்த பாடசாலை மாணவருக்கு 75,000 ரூபாவும் காப்புறுதி திட்டத்தின் மூலம் செலுத்தப்படவுள்ளது.

பாடசாலை மாணவர்கள் பூரண அங்கவீனத்துக்கு உள்ளாகும் போது 100,000 ரூபாவும், பகுதியளவில் காயமடைகின்ற போது 50,000 ரூபாவும் மற்றும் 100,000 வரையிலும் காப்புறுதி தொகை வழங்கப்படவுள்ளது.

அதனடிப்படையில், 2,348 மில்லியன் ரூபாவை, வருடாந்த தவணையின் கீழ் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் மூலம், இக்காப்புறுதி செயன்முறையினை செயற்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here