படை தளபதிகள் மீது கைவைக்க இடமளிக்க போவதில்லை!

முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய மட்டுமல்ல நாட்டில் உள்ள எவர் மீதும் கைவைக்க இடமளிக்க போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 66வது ஆண்டு விழா மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜெனரல் ஜகத் ஜயசூரியவுக்கு வழக்கு தாக்கல் செய்தமை இலங்கையின் பிரச்சினையல்ல. அது கடலுக்கு அப்பால் உள்ள பிரச்சினை.

எந்த படை தளபதிகளுக்கோ படையினர் மீதோ கைவைக்க இடமளிக்க போவதில்லை.

அரசசார்பற்ற நிறுவனங்கள் கூறுவதற்கெல்லாம் ஆட்டம் ஆட முடியாது. எனினும் நாட்டை நேசிக்கும் அரசசார்பற்ற நிறுவனங்களுடன் நான் பணியாற்றுவேன்.

பண்டாரநாயக்க – செல்வநாயகம் ஒப்பந்தம் அல்லது டட்லி – செல்வநாயகம் ஒப்பந்தங்கள் செயற்படுத்தப்பட்டிருந்தால், பிரபாகரன் ஒருவர் உருவாகி இருக்க மாட்டார் எனவும் ஜனாதிபதி தனது உரையில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here